×

நிலத்தடி நீர் சரிந்ததால் கோம்பை, பண்ணைப்புரத்தில் காலியான திராட்சை விவசாயம்

தேவாரம்: கோம்பை, பண்ணைப்புரம் பகுதியில் திராட்சை விவசாயம் போதிய தண்ணீர் இல்லாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. கம்பம் பள்ளதாக்கில் பெரியாறு அணை தண்ணீர் பாயக்கூடிய கூடலூர், கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் அதிக ஏக்கர் பரப்பில் திராட்சை விவசாயம் நடக்கிறது. பன்னீர் திராட்சை வருடத்திற்கு 3 முறை வெட்டி எடுக்கப்பட்டு கேரளா, தமிழகத்தின் தென்மாவட்டங்கள், வடமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அதேநேரத்தில் அதிகம் தண்ணீரே இல்லாத பகுதியாக உள்ள தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் உள்ளிட்ட பகுதியில் கடந்த 25 வருடத்திற்கு முன்பு அதிக ஏக்கர் பரப்பில் திராட்சை விவசாயம் நடந்தது. இப்போது கோம்பை, பண்ணைப்புரத்தில் சில ஏக்கர் பரப்பிலேயே இது நடக்கிறது. 100 ஏக்கருக்கும் மேல் திராட்சை விவசாயம் கைவிடப்பட்டுள்ளது. காரணம் நிலத்தடிநீர்மட்டம் குறைந்துவிட்டது. திராட்சை விவசாயத்தை ஊக்குவிக்கவும் அதிகாரிகள் முன்வருவதில்லை. இதனால் கோம்பை, பண்ணைப்புரம் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் திராட்சை விவசாயமே இல்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : collapse ,vineyard , kombai, grapes, agriculture
× RELATED தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த...